பெண் அதிகாரியின் கழுத்தை பிடித்த உயர் பொலிஸ் அதிகாரிக்கு ஆப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை தடுத்து வைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து இரண்டு பெண்கள் பேரணியை ஆரம்பித்துள்ளனர்.

பாணந்துறை பிரதேசத்தில் குறித்த பெண்களை கைது செய்ய அவர்கள் தயாரான போது, ​​பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்ய முன்வரவில்லை என குற்றஞ்சாட்டி சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் ஆவேசமாக செயற்படும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

இந்தியாவில் குறித்த பொலிஸ் அதிகாரியின் நடத்தை தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உதவி பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

Previous articleவவுனியாவில் பாதுகாப்பற்ற நிலையில் பயணிக்கும் கர்ப்பவதிகள்!
Next articleஇலங்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்: இரு சிறுமிகள் சடலமாக மீட்பு !