கதிர்காமத்தில் துப்பாக்கி வெடித்ததில் சிறுவன் உயிரிழப்பு!

கேஸ் துப்பாக்கி தவறுதலாக வெடித்து சிதறியதில் 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

கதிர்காமம் – தெடகம பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

குண்டுவெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுவன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழில் குளத்தில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு !
Next articleயாழ். பல்கலை இந்து பீடத்திற்கு மாணவர்களை உள்ளீர்க்க தீர்மானம்!