அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல் !

இலங்கையில் அரச ஊழியர்கள் தொடர்பில் அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படும் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் தொடர்பிலேயே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அரசியல் கட்சிகள், குழுக்கள், வேட்பாளர்கள் மற்றும் பிற கட்சிகள், குழுக்கள், வேட்பாளர்கள் பொதுச் சொத்துக்களை விளம்பரப்படுத்த பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்களிப்பு மாவட்டங்களில் அரச ஊழியர்களின் ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, இடமாற்றம் என்பன கட்டுப்படுத்தப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் தலைமையிலான அனைத்து அதிகாரிகளுக்கும் இது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleசட்டவிரோதமாக கனடா செல்ல முயன்ற 38 இலங்கையர்கள் விடுத்த கோரிக்கை!
Next articleயாழில் மீட்கப்பட்ட கைக்குண்டு ! தீவிர விசாரணையில் பொலிஸார் !