போதைப்பொருள் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்ட இரு இளைஞர்கள் !

ரம்புக்கனை பகுதியில் இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மாவனல்லை பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் போதைப்பொருள் பெற்று பணம் செலுத்தத் தவறியதற்காக சில வாரங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இளைஞன் காணாமல் போனமை தொடர்பில் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் கேகாலி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். சந்தேக நபர்கள் இளைஞர்களை கொன்று அதே தோட்டத்தில் புதைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் இளைஞர்களை கொன்று தோட்டத்தில் புதைத்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த ஏனைய சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழில் தாளி செய்து கொடுப்பதில் மோசடி செய்த ஒருவர் கைது !
Next articleயாழில் போதை மாத்திரைகளுடன் 18 வயது வாலிபருடன் சிக்கிய 25 வயது யுவதி !