3 வயது சிறுவனை கடத்திய மர்ம குமு்பல் ! கதறும் தாய் ! வடக்கில் நிகழந்த சோகம்!!

வடக்கில் 3 வயது சிறுவன் ஒருவர் மர்மநபர்களால் கடத்தப்பட்டுள்ளதாக சிறுவனின் தாயார் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இச்சம்பவமானது அனுராதபுரம் எப்பாவல , கிராலோகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கிராலோகம சுபோதி மகா வித்தியாலயத்தில் நான்காம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இது தொடர்பாக, குழந்தையின் தாய் எப்பாவல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த சிறுவனை அப்பகுதியில் இலத்திரனியல் ஒலிப்பதிவு கடை நடத்தும் நபர் ஒருவர் கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக சிறுவனின் தாய் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ள குழந்தை தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் எப்பாவல பொலிஸ் நிலையத்திற்கு 0252249122 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எப்பாவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

Previous articleயாழில் வல்வைப்போட்டியில் தொடர் சாதனை படைத்த இளைஞர் !
Next articleயாழ். வானில் பறந்த பலவிதமான வண்ணங்களில் விசித்திரப் பட்டங்கள்!