15 வயது சிறுமியுடன் குடும்பம் நடாத்திய 21 வயது இளைஞன் கைது!

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியினை சேர்ந்த  21 வயது இளைஞன் 15 வயதுடைய சிறுமியுடன் 8 மாத காலமாக குடும்பம் நடாத்தி சிறுமி ஏழு மாதகால கர்ப்பமாக இருந்துள்ளார்.

குறித்த சிறுமியை கிளினிக்கிற்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு சென்ற வேளை சிறுமியின் வயதினை அறிந்த சட்ட வைத்திய அதிகாரிகள் சிறுமியை பாதுகாப்பான முறையில் மருத்துவ பராமரிப்பிற்கு உட்படுத்தியுள்ளனர்.

மேலும் சட்டத்திற்கு முரணான வகையில் குடும்பம் நடாத்திய இளைஞனை கைது செய்த பொலிசார் குறித்த இளைஞனை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும்  26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும்சட்டத்திற்கு முரணான வகையில் குடும்பமாக வாழவைத்த சிறுமியின் குடும்பத்தினரையும் பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர்!

Previous article14 நாட்களுக்கு மின்தடை இல்லை ! வெளியான மகிழ்ச்சித் தகவல் !
Next articleயாழில் தேங்காய் விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழப்பு!