முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம்தொடர்பில் ஜனாதிபதி கூறியுள்ள விடயம்!

 முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தி முஸ்லீம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் தான் தலையீடு செய்யப் போவதில்லை அது முஸ்லீம் சமூகத்திற்கு உரியதொரு விடயம் எனவும் ஜனாதிபதி அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றும் போது கூறியுள்ளார்

எவ்வாறு இருப்பினும் முஸ்லீம் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்க கூடிய எந்தவொரு செயலையும் தான் மீளாய்வு செய்யப் போவதில்லை எனவும் கூறியுள்ளார் முஸ்லீம் திருமண விவாகரத்துச் சட்டத்திற்கு எதிராக பிள்ளைகள் சிலர் ஆர்ப்பாட்டம் செய்வதனை நான் பார்த்துள்ளேன்.அதை அங்கீகரிக்க இயலாது

இவ்வாறு பிள்ளைகள் ஆர்ப்பாட்டம் செய்வது சட்டத்தை மீறும் செயலாகும்.இவாறு பிள்ளைகள் ஆர்ப்பாட்டம் செய்தால் முஸ்லீம்கள் மீது எதிரானபுரிதலை அது ஏற்படுத்தும் அது நல்லதல்ல நாம் அடிபட்டு கொள்வது பபோல் அல்லாமல் அனைவரும்  நல்லுறவுடன் இணைந்து பயணிக்கும் காலம் இது என ஜனாதிபதி குறிப்பிட்டு கூறியுள்ளார்

Previous articleவேலன் சுவாமி கைது செய்யப்படதை கண்டித்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட யாழ் பல்கலை மாணவர்கள்!
Next articleஉலக வங்கிச் சுட்டெண்ணில் முன்னேற்றம் அடைந்துள்ள இலங்கை!