கம்பளையில் வங்கி ஏ.டி.எம் இயந்திரம் கொள்ளை – நால்வர் கைவரிசை

கம்பளை கண்டி வீதியிலுள்ள தனியார் வங்கியொன்றில் இருந்து நான்கு சந்தேகநபர்கள் ஏ.டி.எம் இயந்திரத்தை முற்றாக அகற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 12.40 அளவில் இடம்பெற்றுள்ளது.

விசாரணையில் அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த 4 பேர் மினிவேனில் வந்து ஏ.டி.எம் இயந்திரத்தை அகற்றியது தெரியவந்தது.

இந்த சம்பவத்திற்கு முன்னதாக வங்கியில் கடமையாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தரை சந்தேக நபர்கள் கட்டிப்போட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏ.டி.எம் இயந்திரத்தில் எவ்வளவு பணம் இருந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleபாடசாலை முடிந்து பேருந்தில் வீடு திரும்பிய மாணவிக்கு நேர்ந்த சோகம்!
Next article45,000 ரூபாவுக்கு மேல் மாதாந்த வருமானம் பெறும் அனைவரிடம் வரி அறவிட உத்தரவு!