அஞ்சல் மூல வாக்களிப்பு தினம் எதிர்வரும் வாரத்தில் அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிக்கும் திகதி எதிர்வரும் வாரத்தில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்

தற்போது, தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேர்தல் வாக்குப்பதிவுக்கான வாக்காளர் அட்டைகள் அச்சடிக்கும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கல்முனை நகரம் மற்றும் எல்பிட்டிய பிரதேச சபை தவிர்ந்த 339 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

அதேவேளை, இம்முறை 1 கோடியே 70 ஆயிரம் வாக்காளர் அட்டைகளை அச்சிட எதிர்பார்த்துள்ளதாகவும் அரசாங்க அச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் கண்காணிப்பு ஆணைக்குழுவிற்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

தேர்தல்கள் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

இதன் போது தேர்தல் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

Previous articleபெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விலைகள் குறைந்துள்ளன!
Next articleஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி மாநாடு : பல கட்சிகள் புறக்கணிக்க தீர்மானம்