முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

LONDON, UNITED KINGDOM - MARCH 09: (EMBARGOED FOR PUBLICATION IN UK NEWSPAPERS UNTIL 48 HOURS AFTER CREATE DATE AND TIME) President of Sri Lanka Maithripala Sirisena attends the Commonwealth Observance Service at Westminster Abbey on March 9, 2015 in London, England. (Photo by Max Mumby/Indigo/Getty Images)

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (27) காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்க தவறியமைக்கு எதிராக, அருட்தந்தை சிறில் காமினி உள்ளிட்ட இருவரினால் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பான வழக்கில் முன்னிலையாக முன்னாள் ஜனாதிபதி நீதிமன்றுக்கு வந்துள்ளார்.

எவ்வாறாயினும், தன்னை பிரதிவாதிகயாக பெயரிட்டு தாக்கல் செய்த வழக்கை இடைநிறுத்த உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

https://youtu.be/3QcefNQkChA