மீண்டும் பிரதமராகும் மஹிந்த ! வெளியான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு !

மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பது தொடர்பில் ஆளும் கட்சிக்குள் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராக நியமிக்கப்படுவார் என அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

அதற்கமைய, பிரதமர் தினேஷ் குணவர்தனவும் எந்த நேரத்திலும் பிரதமர் பதவியை ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் அவர் ஏற்கனவே பிரதமர் பதவிக்கான சிறப்புரிமைகளை மிகவும் குறைவாகவே அனுபவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமர் பதவியை வகிப்பாரா இல்லையா என்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமர் பதவியை ஏற்பதற்கு பொதுஜன பெரமுனவின் ஒரு குழு உடன்படவில்லை என்பதே அதற்குக் காரணமாகும்.

இன்னொரு தரப்பினர், மீண்டும் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ ஏற்க வேண்டும் என்று கூறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleநாடாளுமன்றிற்கு அருகில் போராட்டம்!
Next articleயாழில் 75வது சுதந்திர தினத்தை ஆதரித்து கொண்டாடும் முகமாக முன்னெடுக்கப்பட்ட பேரணி !