சட்டவிரோதமான முறையில் நடைபெற்ற முகநூல் விருந்தில் 34பேர் கைது!

நாட்டில் சட்டவிரோதமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட முகநூல் விருந்து ஒன்று நடைபெற்ற இடத்தில் வைத்து  09 யுவதிகள் உட்பட 34 பேரை பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.

பாணந்துறை பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றிலே குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறித்த விருந்தின் போது யுவதி ஒருவர் துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டிருந்தார்.மேலும் அங்கு பொலிசார் நடாத்திய சோதனையில் கஞ்சா, குஷ் மற்றும் மதுபானம் போன்ற பல வகையான போதைப் பொருட்கள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் சிலரை பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலையில் உட்படுத்த உள்ளதாகவும் ஏனைய சந்தேக நபர்களை பெற்றோரை வரவழைத்து பிணையில் விடுவிப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்

Previous articleமஹிந்தவுக்கு மீண்டும் பிரதமர் பதவி
Next articleஎமக்கு சுதந்திரம் கிடைக்காத நிலையில் அதனை எவ்வாறு கொண்டாடுவது-அங்கஜன் இராமநாதன்