நாளாந்த இடம் பெறும் மின் வெட்டுக்களால் சேதமடையும் மின் உபகரணங்கள்

இலங்கையில் நாளாந்தம் இடம்பெறும் மின் வெட்டுக்களால் மின் உபகரணங்கள் அதிகளவில் சேதமடைவதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே அவர்கள் கூறியுள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இது தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகி உள்ளதாகவும் எனினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்காததால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக லக்ஷபான, ஹட்டன், நுவரெலியா உள்ளிட்ட பல பகுதிகளில் மின் உபகரணங்கள் சேதமடைந்துள்ளதாகவும் மேலும் மின்சார கட்டண அதிகரிப்பினால் வழங்கப்படும் மின்சாரத்தின் தரம் சரியானதாக இருக்கப்பட வேண்டும் என மேலும் குறிப்பிட்டுள்ளார்

Previous articleயாழ் நெல்லியடிப் பகுதியில் போதை பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!
Next articleஉணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி