லொட்டரி சீட்டில் கிடைத்த பணத்தை கொண்டு மனைவியின் தங்கையுடன் ஓட்டமெடுத்த 45 வயது நபர்

கண்டி நகரில் லொட்டரி சீட்டில் கிடைத்த அதிர்ஷ்டத்தை அடுத்து தன்னுடைய மனைவியின் தங்கையுடன், முடி திருத்துனர் ஒருவர் ஓடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கண்டியின் – கலஹா நகரில் சலூன் வைத்திருக்கும் சுமார் 45 வயதான முடி திருத்துனர் ஒருவர் ஒவ்வொரு நாளும் பல வகையான அதிர்ஷ்ட இலாபச் சீட்டுகளை கொள்வ​னவு செய்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.அவ்வாறு அவர் கொள்வனவு செய்யும் வேளை அவருக்கு ஐந்து லொட்டரி சீட்டுகளில் சுமார் 5 இலட்சம் ரூபாய் அதிர்ஷ்டமாக கிடைத்துள்ளது

இதனை அறிந்த உறவினர்கள் அவருக்கு வாழ்த்து சொல்ல வந்திருந்தனர் அவ்வாறு வாழ்த்துச் சொல்ல குறித்த நபரின் மனைவியின் தங்கையும் அவர்களின் இரண்டு பிள்ளைகளும் வந்திருந்தனர் இரண்டொரு நாட்கள் அங்கேயே தங்கிவிட்டனர். மனைவியின் ஆலோசனையின் பிரகாரமே அவர்கள் அவ்வீட்டில் தங்கியுள்ளனர்.

அன்றையதினம் அதிகாலையில் எழுந்து தங்கையின் அவ்விரு பிள்ளைகளும் தாயை தேடி அழுதுள்ளனர். முடித்திருத்துனரின் மனைவி, தன்னுடைய தங்கையை வீடு முழுவதும் தேடியுள்ளார் இருப்பினும் தங்கையை காணவில்லை. இது குறித்து தனது கணவனிடம் கூறுவதற்கு கணவனை வீட்டின் பல இடங்களில் தேடிய போதும் காணவில்லை

அதன் பின்னரே முடி திருத்தினரின் மனைவிக்கு புரிந்தது தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் தன்னுடைய தங்கை அக்காவுக்கு பரமாக்கிவிட்டு ஓட்டியுள்ளார் என்பது ஓட்டிச் சென்ற தங்கையின் கணவன் குறித்த தகவல்களும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

Previous articleமயமான பாடசாலை மாணவனை தேடும் பெற்றோர்
Next articleரயில் பயணிகளின் கவனத்திற்கு