இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி!

கடந்த ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 2 ஆயிரத்து 755 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி மார்ச் மாதத்தில் உத்தியோகபூர்வ கையிருப்பு 2 ஆயிரத்து 694 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.

இந்தநிலையில் உத்தியோகப்பூர்வ கையிருப்பு ஏப்ரல் மாதம் 2.2 சதவீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்த உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களில் சீனாவின் மக்கள் வங்கியினது 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இடமாற்று வசதியும் அடங்கியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.