இலங்கையில் கொரொனோ தொற்று காரணமாக 16 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கோவிட் தொற்று காரணமாக கடந்த 20 நாட்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவல்களை தொற்று நோய்ப் பிரிவு வெளியிட்டுள்ளது.

கடந்த 20 நாட்களில் சுமார் 170 தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த 7ம் திகதி மூன்று பேர் கோவிட் காரணமாக உயிரிழந்துள்ளனர் என்பதுடன் கடந்த 6 மற்றும் 16ஆம் திகதிகளில் ஒரே நாளில் தலா 13 நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

உயிரிழந்த 16 பேர் நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கோவிட் பெருந்தொற்று காரணமாக இதுவரையில் 16856 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleதமிழின படுகொலை நினைவுநாள் அனுஷ்டிப்பு!
Next articleயாழில் சப்ரைஸ் கிப்ட் கொடுத்துவிட்ட கணவனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மனைவி ! சப்ரைஸ் கிப்ட் குடுக்க வந்தவனுடன் மனைவி ஓட்டம் !