இலங்கை தமிழரசு கட்சியின் தலைமையை ஏற்க்க தயார் -சீ.வீ.கே.சிவஞானம்

  அனைவரும் ஏகமனதாக என்னை தெரிவு செய்தால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையினை ஏற்கத் தயார் என அக்கட்சியின் மூத்த துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

சமகால நிலைமைகள் தொடர்பாக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தமிழரசு கட்சியின் தலைமை தொடர்பாக ஊடகவியலாளரொருவரின் கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கழுத்தறுத்து பதவிக்கு வர விரும்பவில்லை

நான் பதவிக்காக கட்சிக்குள் போகவில்லை. முரண்பாடு இல்லாத நிலையேற்பட்டு அனைவரும் ஏக மனதாக தெரிவு செய்வார்களாக இருந்தால் போட்டியில்லாது அனைவரதும் ஒத்துழைப்போடு இணக்கப்பாட்டோடும் தெரிவு செய்தால் அதை நான் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலையில் உள்ளேன்.

ஒருமனதாக முரண்பாடு இல்லாமல் தெரிவு செய்யப்பட்டால் நான் அந்த கடமையினை செய்யக்கூடிய ஆற்றல் பொறுப்பு எனக்குள்ளது என்றார்.

அதற்காக நான் யாரையும் குறை சொல்லியோ யாரையும் கழுத்தறுத்து பதவிக்கு வர விரும்பவில்லை என கூறிய அவர், தலைமைக்கு தகுதியுடையவர் என என்னை பலர் கேட்கின்றார்கள், சொல்லுகின்றார்கள் என்பது உண்மையாக இருந்தாலும் கூட எங்களுடைய கட்சி ஒற்றுமையாக போக வேண்டும் என்றார்.  

Previous articleபயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் நால்வர் கைது!
Next articleஇலங்கையின் முன்னாள் இராஜதந்திர அதிகாரி ஜயந்த தனபால உடல் நலக் குறைவால் காலமானார்!