களுத்துறை மர ஆலையில் தீ விபத்து!

களுத்துறையில் மர ஆலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்குள்ள மரப்பொருட்கள் அனைத்தும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

களுத்துறை – வஸ்கடுவ பகுதியில் உள்ள மர ஆலை ஒன்றிலேயே நேற்று வெள்ளிக்கிழமை (11) இரவு 9.30 மணிக்கு இத் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து களுத்துறை மாநகர சபையின் இரு தீயணைப்பு வாகனங்கள் பகுதிக்கு அனுப்பப்பட்டதுடன் இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

மேலும் தீபரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleநல்லூர் ஆலய திருவிழா நேரத்தில் இடம்பெறும் திருட்டுக்களை தடுக்க புதிய தீர்மானம்!
Next articleஅம்பாறையில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு!