இலங்கை வந்த வெளிநாட்டு பிரஜைக்கு நிகழ்ந்த சோகம்!

காலி ஹிக்கடுவ கடலில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந் நபரை நாரிகம பொலிஸார் மீட்டு காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இழுத்து செல்லப்பட்ட வெளிநாட்டவர்

இந்த வெளிநாட்டவர் நீர்வீழ்ச்சியில் சிக்கி சுமார் 500 மீற்றர் தூரம் கடலில் இழுத்து செல்லப்பட்டு தத்தளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விரைந்து செயல்பட்ட பொலிஸார் உயிர்காப்புப் பிரிவு அதிகாரிகள் நீண்ட நேர முயற்சியின் பின்னர் அந்த வெளிநாட்டவரை காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 39 வயதான ரஷ்ய பிரஜை ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.