மாவீரர் நினைவேந்தலுக்கான தடை நிராகரிப்பு!

  யாழ்ப்பாணம் – தெல்லிப்பளைப் பொலிஸாரால் மாவீரர் நாள் நினைவேந்தலுக்குத் தடைகோரிய விண்ணப்பம் சற்றுமுன்னர் மல்லாகம் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மாவீரர் நினைவேந்தலை தடை செய்யக் கோரி மானிப்பாய் பொலிஸாரால் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதேவேளை மட்டக்களப்பிலும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடைவிதிக்ககோரிய பொலிஸாரின் கோரிக்கை கடந்த வாரம் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.